×

கோஹ்லிக்கு கண், கை பிரச்னையில்லை: வீரேந்திர சேவாக்

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் கேப்டன் வீராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை. இது குறித்து மூத்த வீரர் கபில்தேவ் ‘வயது காரணமாக  பந்தை கணிப்பதில் கோஹ்லியின் பார்வையும், கைகளும் ஒருங்கிணைந்து செயல்படததால் அவர் நியூசி தொடரில் சரியாக ஆடவில்லை. அதற்கான பயிற்சியை மேற்கொண்டால் அதனை சரி செய்து விடலாம்’ என்று  ஆலோசனை தெரிவித்திருந்தார். கூடவே ‘வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், விவியன் ரிச்சர்ஸ்ட்ஸ் என பல  வீரர்கள் இதுப்போன்ற பிரச்னைகளை  சந்தித்துள்ளனர்’ என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில் வீரேந்திர சேவாக், ‘ கோஹ்லிக்கு  கண்,கை ஒருங்கிணைப்பு பிரச்னை இல்லை.

அது ஒருநாளில் நிகழ்வதில்லை. படிப்படியாக தான் கண்,கை ஒருங்கிணைப்பு பிரச்னை ஏற்படும். பார்மில் இல்லாத போது எது செய்தாலும் பலன் கிடைப்பதில்லை. அதுதான் இப்போது கோஹ்லிக்கு உள்ள பிரச்னை. அதிர்ஷ்டம் கூட அவரை கைவிட்டுவிட்டது. எந்த பந்தை அடிப்பது, எந்த பந்தை விட்டு விடுவது என்பது முக்கியமானது. நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கும் போது அதை சரியாக கணிக்க முடியும். அழுத்தம் இருக்கும் போது அப்படி கணிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kohli ,Virender Sehwag , Kohli, Virender Sehwag
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு