×

சில்லி பாயின்ட்.... வங்கதேச கேப்டன் விலகல்:

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மஷ்ரப் மோர்தாசா(36)  கேப்டன் பதவியில் விலகுவதாக அறிவித்துள்ளார். வங்கதேசம் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற வங்கதேசம் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. எஞ்சிய ஒருப்போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியுடன் மோர்தாசா கேப்டன் பதவியில் விலகுகிறார். வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடனாக கருத்து வேறுபாடு தொடர்வதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 50 ஒருநாள் போட்டிகளில் வெற்றிப் பெற்றுதந்த வங்கதேச கேப்டன் என்ற பெருமையை மோர்தாசா பெறுவார். அவர் இதுவரை 87 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 49 போட்டிகளில் வெற்றியை ஈட்டி தந்துள்ளார்.

இந்தியா போறீங்களா? உஷார்:
இந்தியாவில் கொேரானா வைரஸ் பரவுவதை அடுத்து  ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள தங்கள் வீரர்கள் பாதுகாப்பு  நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் வீரர்கள், வீராங்கனைகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில்  கேன் வில்லியம்சன்(ஐதராபாத்),  லாக்கி பெர்கூசன்(கொல்கத்தா), மிட்செல் மெக்கலகன், டிரென்ட் போல்ட்(மும்பை), ஜிம்மி நீஷம்(பஞ்சாப்),  மிட்செல் சான்ட்னர்(சென்னை) என 6 நியூசிலாந்து வீரர்கள்  களம் காண உள்ளனர்.

கொேரானாவும்...ஒலிம்பிக்கும்...
கொேரானா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானை வேறு மாதிரி பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. அங்கு இந்த ஆண்டு ஜூலையில் நடக்க உள்ள ஒலிம்பிக் நடக்குமா? நடக்காதா? என்ற விவாதங்கள் நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.கொேரானா வைரசால் அங்கு 1036பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் ஒரே நாளில் 36பேர் பாதிக்கப்பட்டுள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது. இதுவரை கொேரானாவால் அங்கு 12பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிக்கான அமைச்சர் சீகோ ஹாஷிமோடோ, ‘ஒலிம்பிக்கை தள்ளி வைப்பதையோ, ரத்து செய்வதையோ விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும்.

எங்களை பொறுத்தவரை ஒலிம்பிக் போட்டி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இது குறித்த இறுதி முடிவை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எடுக்க வேண்டும்’ என்று நேற்று கூறியுள்ளார். ஆனால் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டத்தில் அதன் தலைவர் தாமஸ் பாக்கும், ‘ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்படும் என்றோ அல்லது ரத்து செய்யப்படும்’ என்று ஏதும் சொல்லவில்லை. அதனால் ‘நடக்குமா’ என்ற சந்தேகம் தொடர்கிறது.

Tags : Bangladesh , Bangladesh captain ,deviates:
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...