×

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

தண்டையார்பேட்டை: போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் எச்சரித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை நேதாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் சார்பில் தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், இதுபற்றி சிலர் அதிகளவில் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்தும் வருவதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் கூறுகையில், ‘‘பல்வேறு பகுதியில் நடைபெறும் போராட்டங்களுக்கு போலீசார் முழு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் மிகுந்த கவனத்துடன்  போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறோம். எந்தவித அசம்பாவிதங்களும்  சென்னையில் நடக்காது என ஆணையாளர் உறுதி கூறியுள்ளார். அதற்கேற்ப நாங்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கியுள்ளோம். எனவே, போராட்டத்தை மேலும் தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். அவ்வாறு வரும் தகவலை யாரும் நம்ப வேண்டாம். மேலும், தவறான தகவல்கள் பரப்புவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். அசம்பாவிதங்களை தவிர்க்க தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : protesters ,attack , Protesters, attackers, misinformation, policemen
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...