×

அயர்லாந்துடன் கூட்டு நடவடிக்கை: ஜனாதிபதி தகவல்

புதுடெல்லி: அயர்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் ஒலாபர் ராக்னர் கிரிம்சன் இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஷ்டிரபதி பவன் சென்ற அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அறிவியல் ஆராய்ச்சிகள், ஆர்க்டிக் பிராந்தியத்துக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தி உள்ளன. ஆர்க்டிக் பிராந்தியத்துடன் தொடர்பில் இருக்கவும், அயர்லாந்துடன் கூட்டு நடவடிக்கைகளுக்கான புதிய பாதையையும் இந்தியா எதிர்நோக்கி உள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் பருவநிலை மாற்றம் குறித்த பிரச்னைகள், அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆர்க்டிக் சர்க்கிளை உருவாக்குதல் உள்ளிட்ட கிரிம்சனின் முயற்சிகளை அவர் பாராட்டினார். நாமும், நமது எதிர்கால சந்ததியினரும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்த உலகைக் கட்டி எழுப்ப அனைவரும் இணைந்து பங்களிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Partnership ,Ireland , Ireland, joint action, President
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...