×

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு: முன்னாள் தலைவர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா எஸ். ஏ. சந்திரசேகர், கேயார், கே. முரளிதரன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்ற மாநில தயாரிப்பாளர் சங்கத்திற்கு முன்னோடி சங்கமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.தேர்தலில் போட்டியிட்டால், அதற்கு பணம் செலவழிக்கப்படும். அதன் மூலம் வெற்றி பெறுகிறவர்கள் செலவழித்த பணத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள்.

சமூக சேவை நோக்கோடு பொறுப்புக்கு வருகிறவர்களால்தான் நிர்வாகத்தை செம்மையாக நடத்த முடியும். அதோடு தேர்தலை நடத்தும் அளவுக்கு சங்கத்தின் நிதி நிலையும் சரியாக இல்லை. அதனால் அனைவரும் ஒன்றுகூடி பேசி தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளையாவது  போட்டியின்றி தேர்ந்து எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள் பேட்டியின்போது தயாரிப்பாளர்கள் கே ராஜன்,  சுரேஷ் காமாட்சி ஆகியோரும் உடனிருந்தனர்.

Tags : executives ,leaders ,Producers ,selectors , Producers, executives, selectors, former leaders, demand
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது