×

கோயில் திருவிழா நடத்துபவர்கள் குறித்து அவதூறு ‘டிக் டாக்’ வெளியிட்ட இன்ஜினியர் உள்பட 2 பேர் கைது

பாலக்கோடு: பாலக்கோட்டில் மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துபவர்கள் குறித்து அவதூறு டிக் டாக் வெளியிட்ட இன்ஜினியர் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வரும் 10ம் தேதி புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. கடந்தாண்டு திருவிழா நடந்தது முதலே, இருதரப்பினர் இடையே திருவிழாவில் கரகம் எடுப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பு திருவிழாவுக்கான பணிகளை ஒரு தரப்பை சேர்ந்த ஊர்கவுண்டர் அன்பரசு மற்றும் பலர் செய்து வருகின்றனர்.

இதனால் மற்றொரு தரப்பை சேர்ந்த சிலர், ஊர் கவுண்டர் அன்பரசு மற்றும் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வட்டே கவுண்டர்  ஆகியோர் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக டிக் டாக் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ஒரு மாதமாக இணைய தளங்களில் வெளியாகி பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஊர் கவுண்டர் அன்பரசு, வட்டேகவுண்டர்(50) ஆகியோர், இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், கோயில் திருவிழா நடத்துபவர்கள் குறித்து அவதூறு டிக் டாக் வீடியோ வெளியிட்டதாக, மற்றொரு தரப்பை சேர்ந்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சின்னமாரி மகன் இன்ஜினியர் செந்தமிழன்(26),  முருகன் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆகிய இருவர் மீது வழக்குபதிவு நேற்று அவர்களை கைது செய்தனர்.

Tags : engineer ,temple festival organizers ,Temple ,festival , Temple festival, scandalous tick-tag, engineer, arrested
× RELATED உடல் பருமன் குறைப்பு...