×

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 44 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அதே இடத்தில் சட்டத்திற்கு ஆதரவாக போராட  நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும்பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் 44 பேரும், ஆர்எம்எல் மருத்துவமனையில் 5 பேரும், எல்என்ஜேபி மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 53 பேர் பலியாகி உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய டெல்லி போலீசார்; இதுவரை ஆயுத சட்டத்தின் கீழ் 47 வழக்குகள் உள்பட 654 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  1,820 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.


Tags : Northeast Delhi , Northeast Delhi, Violence
× RELATED வடகிழக்கு டெல்லி கலவரம்...