×

எல்லையில் பாக். தொடர்ந்து அத்துமீறல்: குப்வாராவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

குப்வாரா: இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது.  இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2003ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் அமைதி மற்றும் கட்டுப்பாடு நீடிக்க செய்ய இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த புரிந்துணர்தலை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து இந்தியா அந்நாட்டுக்கு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மீறி வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாக்., நிலைகள் மீது சிறிய ரக ஏவுகணைகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதியான குப்வாராவுக்குள் பாக்., ராணுவம் ஆயுத தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தக்க பதிலடி கொடுத்தது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags : border ,Pak ,India ,Stations ,Pakistani Army ,Kubwara ,Action Attack , Boundary, Pak. , Violation, Kupwara, India, Action Attack
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...