×

வங்கி மோசடி வழக்கு: 5-வது முறையாக நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து நீதிமன்றம்

டெல்லி: வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி(48), அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளர். இந்தியாவில் உள்ள அவா்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.  நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அடுத்தடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிரவ் மோடியின் சிறை காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் இதுவரை 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது முறையாக ஜாமீன் கேட்டு நிரவ் மோடி சார்பில் நேற்று மீண்டும் புதிதாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுவை விசாரித்த லண்டன் கோர்ட், அவரது ஜாமீன் மனுவை ஐந்தாவது முறையாக மீண்டும் நிராகரித்தது.

Tags : Bankruptcy Court ,Narev Modi ,Bank ,Nirav Modi , Bank fraud, Nirav Modi, bail petition, dismissed
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...