×

மகளிர் உலகக்கோப்பை: 5 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா... இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை

தென்னாப்பிரிக்கா: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் ஆஸ்திரேலியா நுழைந்துள்ளது. சிட்டினியில் கனமழை பெய்ததால் பெண்கள் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஆட்டம் நடைபெற்றது. மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்  தொடரில் 2-வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கியது. அப்போது மலையின் காரணமாக டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 13 ஓவரில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்கத்தில் விறுவிறுப்பாக சென்ற ஆட்டம் கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 12-வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்காவால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா டக்-வொர்த் லீவிஸ் விதியின்படி 5 ரன்னில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Tags : Women's World Cup ,South Africa ,Australia , Women's World Cup, South Africa, Australia
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...