×

2020-ல் கொரோனா தாக்கும் என 2008 -ல் எழுதிய நூலில் தகவல்: சில்வியா பிரவுனின் கூற்று இணையதளத்தில் வைரலானது

வாஷிங்டன்: 2020-ல் கொரோனா வெடிக்கும் எனவும், அதன் கோர கரங்கள் உலகையே சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கும் எனவும் 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு எழுத்தாளர் கூறியிருக்கிறார். சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் பரவுயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு 3 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2020-ல் கொரோனா வெடிக்கும் எனவும், அதன் கோர கரங்கள் உலகையே சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கும் எனவும் 12 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு எழுத்தாளர் கூறியிருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. 2013-ல் மறைந்த பிரபல எழுத்தாளர் சில்வியா பிரவுன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

2008-ல் இவர் எழுதிய End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நூலின் 312-வது பக்கம் இன்று உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை அப்படியே படம்பிடித்து காட்டுகிறது. இதன் தமிழாக்கம்; 2020 வாக்கில் நிமோனியா போன்ற ஒரு நோய் உலகம் முழுவதும் பரவும். நுரையீரல்களையும், சுவாச குழாய்களையும், பாதித்து அது பலருக்கு எமனாக முடியும். எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒலிக்கவோ முடியாது. அதே சமயம் அதில் ஆறுதல் தரக்கூடிய ஒரு செய்தியும் இருக்கிறது.

அதாவது எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags : Corona ,Sylvia Brown , 2020 Corona, Sylvia Brown
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?