×

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு ரூ.155.80 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி

கரூர்: கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு ரூ.155.80 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.155.80 கோடி மதிப்பிலான மருத்துவமனை, கலை அரங்கம், பணியாளா்கள் குடியிருப்பு, உள்ளிருப்பு மருத்துவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்களுக்கான விடுதிகள், சிற்றுண்டியகம் உள்ளிட்ட கட்டடங்களைத் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கரூரில் ரூ. 269.59 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்து, இளநிலை முதலாம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு வகுப்பைத் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, ரூ.155.80 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை முதல்வர் பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் ஒரே நேரத்தில் 800 பேர் அமரும் வகையில் கலை அரங்கம்,பயிற்சி மருத்துவர்கள் விடுதி, பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.

6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் செயல்பாட்டையும் முதல்வர் தொடங்கி வைத்தார். புதிய கட்டிடங்களை பார்வையிட்ட முதல்வர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உயிர் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்,சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை எம்ஆர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் தங்கமணி,சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    


Tags : buildings ,Palanisamy ,Karur ,Government Medical College Hospital ,Government Medical College , Karur, Medical College, Medical College, CM, Edappadi Palanisamy
× RELATED தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி...