×

திண்டுக்கல்லில் பருவ மழை பொய்த்ததால் அறுவடைக்கு முன்பே கருகிய நெற்பயிர்கள்...செய்வதறியாது திகைத்து நிற்கும் விவசாயிகள்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பருவ மழை பொய்த்ததால் அறுவடைக்கு 10 நாட்களே எஞ்சிய நிலையில், நெற்பயிர்கள் காய்ந்து கருகியுள்ளன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். பயிர் விதைத்து உயிர்களை வாழ வைத்து பழகிய விவசாயிகள், தற்போது அவலத்தில் அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள். தமிழகம் முழுவதும் கடந்தாண்டு பரவலாக மழை பொழிந்திருந்த போதும், ஒரு சில பகுதிகளில் பருவமழை பொய்த்தது. இதன் விளைவு அறுவடைக்கு 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்து போகின. இந்த அவலம் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் வேளாண் துறையினர் பரிந்துரைத்த கோ - 51 நெல் ரகத்தை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். பருவமழையை நம்பி பயிரிடப்பட்டதால் ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் வரை விவசாயிகள் செலவழித்தனர்.

ஆனால் அவர்களின் நம்பிக்கையை மழை பொய்யாக்கியதால் காய்ந்த புற்களாக மாறியுள்ளது நெற்பயிர்கள். முற்றிலும் காய்ந்ததால் இதனை மாட்டு தீவனமாக கூட பயன்படுத்த முடியாத வேதனையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். உரங்கள் செலவு, உழவு கூலி என 5 ஏக்கர்களில் பயிரிட்டவர்களுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டமே மிஞ்சியுள்ளது. செய்வதறியாது திகழ்ந்து நிற்கும் இந்த சூழலில், அரசு உதவிக்கரம் நீட்டினாள் தான் இந்த நெருக்கடியில் இருந்து தப்ப முடியும் என புலம்பும் அவலத்திற்கு  விவசாயிகள் ஆளாகியுள்ளனர். தொடர்ந்து, பருவமழையை நம்பி கடும் நஷ்டத்தை சந்தித்து வேதனையில் உள்ளனர் விவசாயிகள். சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நஷ்டயீடு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : season ,Dindigul , Dindigul, Monsoon, Harvesting, Growing Paddy, Stunning Farmers!
× RELATED ஐபிஎல் டி20 சீசன் 17 சாம்பியன் யார்? இறுதி...