×

நரிக்குடி பகுதியில் மழையின்றி வளரும் கண்மாய்கள்: கால்நடை வளர்ப்போர் கவலை

திருச்சுழி :  நரிக்குடி பகுதியில் மழையின்றி கண்மாய்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால்  கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியான நரிக்குடி ஒன்றியத்தில் 176 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பொதுப்பணித் துறைக்கு  சொந்தமான 25 கண்மாய்களும், ஒன்றியத்திற்கு சொந்தமான 212 கண்மாய்களும் உள்ளன. இக்கண்மாய்கள் முழுவதும் கருவேலமரங்கள் அடர்ந்து  காணப்படுகின்றன. இந்த மரங்கள் பருவகாலங்களில் பெய்யும் மழைநீரை முற்றிலும் உறிஞ்சி விடுகிறது.அதே சமயத்தில் கடந்த வருடம் குடிமராமாத்து பணிகள் பெரும்பாலான கண்மாய்களில் கண்துடைப்பிற்காகவே நடைபெற்றது. மேலும்  கண்மாய்களுக்கு வரக்கூடிய முறையான வரத்துக் கால்வாய்கள் துர்வாரப் படவில்லை. அவை சேதமடைந்து தூர்வாரப்படாமல் உள்ளதால் கடந்த  வருடம் பெய்த மழைநீர் கண்மாய்களுக்கு முழு கொள்ளளவை எட்டமால்  ஓரளவிற்கே வந்தது.

பெரும்பாலான கண்மாய்களில் கருவேல மரங்கள் அகற்றப்படாமலும், கால்வாய் தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் மழையை நம்பி  விவசாய பணிகளும் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது சில மாதங்களாக மழை முற்றிலும் மழை பொய்த்ததால் நீர்நிலைகள் முழுவதும் வறண்டு  விட்டன. நரிக்குடி பகுதியில் விவசாயம் முற்றுலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலன வீடுகளில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். அவற்றை விற்று  அதில் வருகின்ற வருமானத்தை  வைத்து அன்றாட வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கிராமங்களில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட  நிலையில் தற்போது கண்மாய்களில் நீர் வேகமாக குறைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,`` திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களிலுள்ள 300க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்தை நம்பியே இப்பகுதி  மக்கள் வாழ்கின்றோம். பல வருடங்களுக்கு மேலாக கண்மாய்களை தூர்வாரப் படாததால் கண்மாய் முழுவதும் கருவேல மரங்களால் அடர்ந்து  காணப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற சிறிதளவு மழைநீர் கூட தேங்குவதில்லை. தற்போது கண்மாயில் நீர் குறைந்து வருவதால் கால்நடைகளுக்கு  போதுமான நீர் இருப்பில் இல்லாததால் என்னசெய்வதென்று அறியாமல் உள்ளோம்’’ என்றனர்.நரிக்குடி பகுதியில் விவசாயம்  முற்றுலும்  பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலன வீடுகளில் கால்நடைகள்  வளர்த்து வருகின்றனர். அவற்றை விற்று அதில் வருகின்ற வருமானத்தை  வைத்து   அன்றாட வாழ்க்கை நடத்தி வருகின்றனர்

Tags : area ,livestock breeders ,Narikkudi ,Nerikkudi , Dry ,eyes ,Nerikkudi area
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு