×

கூடலூர் அருகே புலி தாக்கி மாடு பலி

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கடைசி கிராமத்தில் வசிப்பவர் ராமன், விவசாயி. இவரது பசுமாட்டை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக வீட்டின் அருகில் விட்டுள்ளார். வழக்கமாக மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு வரும் பசுமாடு நேற்று முன்தினம் வராததால் நேற்று காலை அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது மாடு இறந்து கிடந்துள்ளது. மாட்டின் தொடைப் பகுதியை விலங்கு சாப்பிட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த பகுதியில் புலியின் கால் தடம் இருந்ததும், அந்த புலி மாட்டை அடித்து கொன்றதும் தெரிய வந்தது. பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் மாடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தேவர்சோலை சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் புலி நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.Tags : Tiger attacks cow cow ,Koodalur Tiger , Cuddalore, tiger, cow, sacrifice
× RELATED எதுவுமே செய்யாமல் பாத்திரத்தை...