×

மூணாறில் பஞ்சாயத்து அலுவலகத்தில் சி.சி.டி.வி. காமிராக்களின் கட்டுப்பாட்டு அறை திறப்பு

மூணாறு: மூணாறில் சாலையோர ஆக்கிரமிப்புகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை ஆற்றில் கொட்டுபவர்கள்  போன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மூணாறு காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை  கண்டறிவதற்காக மூணாறு பஞ்சாயத்து அலுவலகத்திலும் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.மூணாறில் சாலையோர ஆக்கிரமிப்புகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் முதிரை புழை ஆற்றில் குப்பைகள்  கொட்டுபவர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூணாறு காவல்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பழைய மூணாறு ப்ளோசம் பூங்கா  முதல் மூணாறு டவுன், மாட்டுப்பட்டி சாலை, ராஜமலை சாலை, ரோஸ் கார்டன் போன்ற பகுதிகளில் மூணாறு காவல்துறை சார்பில் 41 சி.சி.டி.வி.  கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவைகளின் கட்டுப்பாட்டு அரை தற்போது மூணாறில் பழைய துணை காவல்துறை அதிகாரி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்  இந்த கட்டுப்பாட்டு அறையில் நிறுவப்பட்டுள்ள திரைகளில் பதிவாகும் காட்சிகளை மூணாறு பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள திரைகளில் காணும்  விதமாக பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக நேற்று முதல் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தொடர்பு கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் துணை காவல்துறை அதிகாரி அலுவலக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள திரைகளில் பதிவாகும் காட்சிகளை பஞ்சாயத்து  அலுவலக திரைகளிலும் காணலாம்.

தற்போது 22 சி.சி.டி.வி. கமெராக்கள் செயலில் இருக்கும் நிலையில் மூணாறில் ஆக்கிரமிப்புகள் ஆற்றில் குப்பைகள் கொட்டுபவர்கள் மற்றும் சமூக  விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பஞ்சாயத்து அதிகாரிகளும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறந்த வழி ஏற்பட்டுள்ளதாக பஞ்சாயத்து  செயலாளர் அஜித்குமார் கூறினார்.

Tags : CCTV ,Control room ,opening ,Munnar Panchayat Office ,Munnar Panchayat Office Control Room , CCTV ,Munnar Panchayat,cameras
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...