×

மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்தியா அணி தகுதி ; அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் முன்னேற்றம்

சிட்னி: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி  முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. சிட்னியில் மழையால் இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டி கைவிடப்பட்டதால் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 4 போட்டிகளிலும் வென்றதால் இந்தியா 8 புள்ளிகளும் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளும் பெற்று இருந்தன.    

*ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கிய இந்த தொடரில், மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.

*ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 17 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதைத் தொடர்ந்து வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை அணிகளை தொடர்ச்சியாகப் பந்தாடிய இந்தியா ஏ பிரிவில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.ஆஸ்திரேலியா (6 புள்ளி) 2வது இடம் பிடித்து அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. நியூசிலாந்து (4), இலங்கை (2), வங்கதேசம் (0) ஏமாற்றத்துடன் வெளியேறின.

* பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த தென் ஆப்ரிக்கா (7 புள்ளி), இங்கிலாந்து (6) அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. வெஸ்ட் இண்டீஸ் (3), பாகிஸ்தான் (3), தாய்லாந்து (1) அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில், பரபரப்பான அரை இறுதி ஆட்டங்கள் சிட்னியில் இன்று நடைபெறுகின்றன. முதலாவது

*இந்நிலையில் சிட்டினியில் கனமழை பெய்வதால் இந்திய நேரப்படி 9.30-க்கு தொடங்க வேண்டிய இந்தியா - இங்கிலாந்து அரையிறுதி போட்டி கைவிடப்பட்டது. ஆதலால் குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 4 போட்டிகளிலும் வென்றதால் இந்தியா 8 புள்ளிகளும் இங்கிலாந்து அணி 6 புள்ளிகளும் பெற்று இருந்தன.

*பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 2வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Tags : India ,semifinals ,T20 World Cup , World Cup, Cricket, Women, Sydney, Indian team, England
× RELATED ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை டிராபி டூர் நியூயார்க்கில் தொடக்கம்!!