டி 20 வரலாற்றில் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் கிரன் பொல்லார்ட்

பலேகேல்: மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரன் பொல்லார்ட் தன்னுடைய 500 ஆவது டி 20 போட்டியின் போது 10,000 டி 20 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி தொடங்கும் முன் மேற்கிந்திய தீவுகள் அணியினர் அந்த அணியின் கிரன் பொல்லார்டுக்கு 500 என்ற எண் கொண்டு புதிய ஜெர்சியை பரிசாக வழங்கினார். நேற்றைய போட்டியில் களமிறங்கிய கிரன் பொல்லார்டுக்கு இது 500 ஆவது டி 20 போட்டி ஆகும். அதை கொண்டாடும் விதமாகவே இந்த புதிய ஜெர்சி வழங்கப்பட்டது.

இதுவரை உள்ளூர், சர்வதேச டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களை கிரன் பொல்லார்ட் கடந்துள்ளார் . டி 20 வரலாற்றில் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை கிரன் பொல்லார்ட் படைத்தார். இந்தப்போடியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் அடித்தது. டி 20 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் அதிகபட்சமாக சிம்மன்ஸ் 67 ரன்கள் அடித்தார். கிரன் பொல்லார்ட் 15 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டி 20 இல் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள்:

கிரன் பொல்லார்ட் - 500

டிவைன் பிராவோ - 453

கிறிஸ் கெயில் - 404

Related Stories:

>