×

கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் முக்கிய துறைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறது: மத்திய அரசு மீது தங்கபாலு குற்றச்சாட்டு

சென்னை: ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சேவாதளம் சார்பில் 75 கிலோ மீட்டர் பாதயாத்திரை தொடக்க விழா சத்திய மூர்த்திபவனில் நேற்று நடந்தது. சேவாதள மாநில தலைவர் குங்பூ விஜயன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு கொடியசைத்து பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் சி.டி.மெய்யப்பன், தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, ஜி.கே.தாஸ், மலர்கொடி, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பாதயாத்திரை சத்தியமூர்த்தி பவனில் இருந்து அண்ணாசாலை தர்கா வரை சென்றது. பின்னர் அங்கிருந்து ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர் என்ற அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை வரும் 6ம் தேதி சென்றடைகிறது. அப்போது வழிெநடுகிலும் குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

முன்னதாக, தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோயில்கள் என மாநில அரசுகளுடைய ஒவ்வொரு துறைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறது என்பது உண்மை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாக உள்ளது. இதை சோனியா காந்தி, ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசு என்பது ஒரு கூட்டாட்சி நிறுவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : government ,regulators , Major sectors, regulators, central government, gold bars, indictment
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...