×

பெட்ரோல் போடுவதில் தகராறு: சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஊழியர் கைது

ஆவடி: அம்பத்தூர், சம்தாரியா நகரைச் சேர்ந்தவர் வசந்தராஜ் (24). இவர், அரசு சட்டக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வசந்தராஜ் பைக்கில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பங்க்கிற்கு பெட்ரோல் போட சென்று உள்ளார். அப்போது, அங்கு வரிசையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து, இவர் தனது பைக்குக்கிற்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளார். அப்போது, அங்கிருந்த ஊழியர் ஒருவர் வரிசையில் வரும்படி கூறியுள்ளார் இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஊழியர் பெட்ரோல் போடும் கன்னால் வசந்த்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வசந்தராஜ் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க்கிற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி பங்க் ஊழியரான திருவேற்காடு, நடேசன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : law student Petrol dispute ,law student attacks , Law student, assault, employee, arrest
× RELATED தனியார் தொழிற்சாலையில் மயங்கி விழுந்து ஊழியர் சாவு