×

தொழிலதிபரை கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது

திருவொற்றியூர்: எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). அதே பகுதியில் டெலிகாலிங் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று எண்ணூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். பின்னர் மது அருந்திவிட்டு ரமேஷ் வெளியில் தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி, ரமேஷை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

பின்னர் எண்ணூர், பெரிய குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, கட்டிப் போட்டு ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அடித்துள்ளனர். ரமேஷ் தன்னிடம் பணமில்லை என கூறியதால், ஆத்திரமடைந்தவர்கள், அவரிடம் இருந்த, ஐந்து, ஏ.டி.எம்., கார்டுகளை பறித்தனர். ரகசிய எண்ணைக் கேட்டு, வங்கி கணக்கில் இருந்து, 97 ஆயிரம் ரூபாய் பணத்தை, எடுத்துள்ளனர். மேலும், மாதந்தோறும், 20 ஆயிரம் பணம் மாமூல் தர வேண்டும் என கூறி நடந்த சம்பவத்தை போலீசில் தெரிவிக்க கூடாது என மிரட்டி அனுப்பினர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் ரமேஷ், எண்ணூர் உதவி கமிஷனரிடம், இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் எண்ணூர் போலீசார், ரமேசை கடத்தியவர்களை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் தாழங்குப்பம் கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது. அவர்கள் தான் ரமேசை கடத்தியவர்கள் என்றும் உல்லாசமாக இருக்க ரமேசை கடத்தியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். விசாரணையில், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த நாரயணன் (38). தினேஷ் (33). வினோத் குமார் (28) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ₹85 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : kidnapping businessman ,arrest , Businessman, kidnapper, money, extortion, 3 people arrested
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...