×

நாங்களும் நல்லவங்கதான் பட ஹீரோவின் வில்லன் வேலை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக பிரமுகரின் மகன் அதிரடி கைது: பழரசத்தில் மயக்க மருந்து கொடுத்து அம்பலம்

சென்னை: கல்லூரி மாணவிக்கு பழரசத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த அதிமுக நட்சத்திர பேச்சாளரின் மகனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவிக்கு, கடந்த ஓராண்டுக்கு முன் இவரது கல்லூரி தோழி மூலம் அண்ணாநகர், 7வது பிரதான சாலையை சேர்ந்த விஜய் ஹரிஷ் (25) என்ற வாலிபர் அறிமுகமானார். இவர் நாங்களும் நல்லவங்கதான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் அதிமுக தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் சூரிய காந்த் என்பவரின் மகன். கல்லூரி மாணவியும் இவரும் நெருங்கி பழகி காதலிப்பதாக கூறி பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளார். இருவரும் ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், கல்லூரி மாணவியை கடந்த 2ம் தேதி விஜய் ஹரிஷ் நைசாக பேசி, விருகம்பாக்கத்தில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு பழரசம் கொடுத்திருக்கிறார். அதை கல்லூரி மாணவி குடித்ததும் மயங்கி விழுந்தார். பின்னர் அந்த மாணவியை விஜய் ஹரிஷ் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அவற்றை தனது செல்போனிலும் படம்பிடித்திருக்கிறார். கண்விழித்து பார்த்து கேட்டபோது, அந்த படக்காட்சிகளை கல்லூரி மாணவியிடம் காட்டி, உல்லாசத்துக்கு வரும்படி விஜய் ஹரிஷ் பலமுறை மிரட்டியிருக்கிறார்.

இதுகுறித்து கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே பெற்றோர் புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் துணை கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். புகாரின்படி இந்த வழக்கை துணைக்கமிஷனர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்குப்பதிவு செய்து  நேற்று காலை அண்ணாநகர் வீட்டில் இருந்த விஜய் ஹரிசை கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். உடனே அவரை கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : film hero ,villain , We are good, film hero, villain, student, rape, son of PM
× RELATED திரைப்பட வளர்ச்சிக் கழக பொறுப்பு: பார்வதியை நீக்கியது கேரள அரசு