காசிமேடு ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவர் கோர்ட்டில் சரண்

தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி கொலை வழக்கில் மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சென்னை காசிமேடு, சிங்காரவேலன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் திவாகரன். இவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த 26ம் தேதி திவாகரன் காசிமேடு கடல் உணவு வியாபாரிகள் நல சங்கம் எதிரே  நடந்து வந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.

இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த காசிமேடு பகுதியை சேர்ந்த விமல், சரத், ஆண்டனி, லோகேஷ், ஸ்டீபன், வேல்முருகன் ஆகிய 6 பேர் காசிமேடு காவல் நிலையத்தில் கடந்த 27ம் தேதி சரண் அடைந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வந்த நிலையில் எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த வெங்கடேசன் (25), அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (29) ஆகிய 2 பேரும் நேற்று  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  சரணடைந்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>