×

இடுக்கி மாவட்டத்தில் மீண்டும் நில அதிர்வு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது பாண்டிப்பாறை கிராமம். இப்பகுதியில் நேற்று காலை 7.52 மணி மற்றும் 8.07 மணியளவில் இரு முறை நில அதிர்வு ஏற்பட்டது. சிறிய அளவில் ஏற்பட்ட நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து பயத்துடன் வெளியில் ஓடினர். நில அதிர்வு காரணமாக சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் இது இரண்டாவது நில அதிர்வு. ஏற்கனவே இடுக்கி ஆர்ச் ஆணை அருகில் அமைந்துள்ள கல்வாரி மவுண்ட் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 1.5 ஆக பதிவானது. இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் இடுக்கி பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். 2018ல் இடுக்கி மாவட்டத்தை கனமழை புரட்டி எடுத்தது. இதன் மூலம் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டனர்.


Tags : Earthquake ,Idukki district , Earthquake , Idukki district
× RELATED ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் 1.32 மணிக்கு மிதமான நிலநடுக்கம்