×

பணிச்சுமை காரணமா? துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை: சிவகங்கை இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை மையத்தில் பணியில் இருந்த காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு இந்தோ - திபெத் எல்லையில் பணிபுரிய உள்ள வீரர்களுக்கு துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த மையத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரான, உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சிங் (38) ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்கொலைக்கு பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமா அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தற்கொலை குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  கடந்த திங்கட்கிழமை திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் தற்கொலை செய்து கொள்வது சிவகங்கை மாவட்ட போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : riots ,Sivaganga ,suicide ,Policeman , Workload, gun, policeman suicide, Sivaganga
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...