×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் தெவலாய்சு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசிரியர் சுரேஷ்பாபு. இவர் 6ம் வகுப்பு மாணவி ஒருவரை அடிக்கடி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  இதை வெளியே யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கும் தகவல் கிடைத்தது.  இதையடுத்து தலைமை ஆசிரியர் சந்திரதேவநேசன், விசாரணை நடத்தி சிஎஸ்ஐ நிர்வாகத்திடம் அறிக்கையை ஒப்படைத்தார். அதன் அடிப்படையில், ஆசிரியர் சுரேஷ்பாபுவை நேற்று சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Students, Sexual Harassment, Teacher, Suspend
× RELATED பொய் சொன்னால் தப்பில்லை; ஆண் - பெண்...