×

நித்தியானந்தாவுக்கு நாடு முழுவதும் எவ்வளவு சொத்து? விவரம் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

பெங்களுரு:  சாமியார் நித்தியானந்தா மீது பாலியல்  பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு  வழக்குகள், கர்நாடகாவின் பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான  வழக்கு ராம்நகரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு எதிரான வழக்கு  ராம்நகரம் மாவட்ட 3வது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி  விசாரணைக்கு வந்தது. அரசு மற்றும் ெலனின் கருப்பன் சார்பில் ஆஜரான  வக்கீல்கள்,  விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தாவுக்கு விலக்களித்து  பிறப்பித்திருந்த அனுமதியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள  உத்தரவு நகலை நீதிபதியிடம் கொடுத்ததுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று  அவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை என்பதை  நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று  வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்த நித்தியானந்தாவுக்கு ஜாமீனில்  வரமுடியாத வாரண்ட் பிறப்பித்து விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு நீதிபதி  ஒத்தி வைத்திருந்தார்.

அதன்படி இவ்வழக்கு நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. வழக்கம் போல் நித்தியானந்தா ஆஜராகவில்லை. அவர்  ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்கக்கோரி அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார்.  அதற்கு கடும் கோபமடைந்த நீதிபதி குற்றவாளி எங்குள்ளார் என்ற  நீதிமன்றத்தின் கேள்விக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால் விலக்கு  அளிக்கும் மனு மட்டும் தாக்கல் செய்யப்படுகிறது என்ன நியாயம் ? என்று  கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியும்  சிஐடி போலீஸ் அதிகாரியிடம் நித்தியானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட  கைது வாரண்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி  எழுப்பினார். நித்தியானந்தா எங்குள்ளார் என்பது தெரியவில்லை. அவர் தங்கி  இருக்கும் இடத்தை கண்டறிய  பல வழிகளில் முயற்சி மேற்ெகாண்டு வருவதாக  தெரிவித்தார். விசாரணை அதிகாரியின் பதிலுக்கு நீதிபதி அதிருப்தி  வெளிப்படுத்தினார்.

அதை தொடர்ந்து வழக்கில் முதல் குற்றவாளியாக  சேர்க்கப்பட்டுள்ள நித்தியானந்தாவுக்கு பிடதியில் உள்ளஆசிரமம் உள்பட நாடு  முழுவதும் எவ்வளவு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன என்ற முழு  விவரம் மற்றும் வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவரின் அசையும், அசையா சொத்து விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்வதுடன்  அடுத்த விசாரணையின் போது நித்தியானந்தாவை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த  வேண்டும் என்று உத்தரவிட்டு மார்ச் 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

Tags : Nityananda , Nityananda, property, court
× RELATED நித்யானந்தா உருவாக்கிய கைலாசா...