×

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய ஓம்காந்தன், ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

மேலூர்:  டிஎன்பிஎஸ்சி வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் சிபிசிஐடி போலீசார், மேலூர் நான்கு வழிச்சாலையில் 3வது முறையாக நேற்று விசாரணை நடத்தினர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம்காந்தன் ஆகியோர், மதுரை மாவட்டம், மேலூர் 4 வழிச்சாலையில் நாவினிப்பட்டி அருகில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே 2 முறை இங்கு வந்த சிபிசிஐடி போலீசார், விடைத்தாள்களில் எப்படி முறைகேடு நடந்தது என்பது குறித்து, நடித்து காட்டும்படி கூறி அதை விஏஓ முன்னிலையில் பதிவு செய்து சென்றனர். இந்நிலையில் கடந்த 2016ல் நடந்த விஏஓ தேர்விலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை சிபிசிஐடி போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர். இதிலும் முக்கிய குற்றவாளிகளாக ஜெயக்குமார், ஓம்காந்தன் உள்ளனர். எனவே, அவர்களை சென்னையில் இருந்து சிபிசிஐடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மேலூர் நான்கு வழிச்சாலைக்கு அழைத்து வந்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை மேலூர் வழியாக கொண்டு சென்றபோதும், இதே இடத்தில் நிறுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அங்குள்ள ஓட்டல் கட்டப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட இடத்தில் மேலூர் விஏஓ தாமோதரன் மற்றும் தலையாரி பதினெட்டான் முன்னிலையில் குற்றவாளிகளிடம் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்று  வீடியோவில் பதிவு செய்தனர். வேறு எங்கு வாகனத்தை நிறுத்தினார்கள் என்பதை கண்டறிய அவர்களை உடன் ஏற்றி சென்றனர்.

Tags : police investigation ,Omkandan ,CBCID ,scandal ,Jayakumar , TNPSC scam, Om Kandan, Jayakumar, CBCID police
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை