×

ஏடிஎம்களில் விரைவில் காலியாகும் பணம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள ஏடிஎம்களில் ரூ.2000 தாள்கள் வைக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் விரைவில் பணம் காலியாகி மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கருப்பு பணம் பதுக்கலை தடுப்பது உள்ளிட்ட காரணங்களை கருத்தில் ெகாண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ரொக்க பரிவர்த்தனைக்கு பதில் இணைய வழி (ஆன்லைன்) பணபரிமாற்றமான கேஷ் லெஸ் டிரேடிங் முறையை வலியுறுத்தி வருகிறது. இதற்காக கேஷ்லெஸ் பணபரிமாற்றத்தை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, ஏடிஎம்களில் ரூ2000 தாள் பரிவர்த்தனை கிடையாது என இந்தியன் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இதர வங்கிகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராவிட்டாலும், ரூ2000ம் தாள்கள் வைக்கப்படுவதில்லை.

சில வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்தும் இயந்திரத்தில் ரூ2000ம் தாள் வாடிக்கையாளர்கள் செலுத்துவதால், அந்த இயந்திரங்களில் மட்டும் ரூ2000ம் தாள் கிடைக்கிறது. மக்களிடம் ரொக்க பணபரிமாற்றத்தை குறைக்கும் வகையில், தற்போது ரூ100 தாள்கள் மட்டுமே அதிகம் வைக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் பல ஏடிஎம்கள் செயல்படாத நிலையில், விடுமுறை நாட்களில் பணமே கிடைப்பதில்லை. இதனால், செய்வதறியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அதிக பணம் எடுக்கப்படும் இயந்திரங்களில், தினசரி இருமுறையாவது பணம் வைக்க வங்கிகள் நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி தேசிய வங்கியின் உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கள்ளப்பணம், முறையற்ற வருவாய் ஆகியவற்றை தவிர்க்க மத்திய அரசு இணைய வழி பணபரிமாற்றத்தை வற்புறுத்தி வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாடு முழுவதும் இரண்டரை லட்சம் கோடிக்கு கணக்கு கேட்டு ேநாட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் வரும். தற்ேபாது, முறையற்ற வருவாயை கட்டுப்படுத்தும் வகையில், ரூ2000 தாள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்படுவதால், நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அடையும்.

ஏழைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ100 தாள்கள் அதிகம் வைக்கப்படுகின்றன. தற்போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும் பிளாஸ்டிக் கேசட்டுகள் ரூ40 ஆயிரத்திலிருந்து ரூ20 ஆயிரமாக குறைந்தாலும், வங்கிகளில் வழங்கும் தொகைக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளதால், போதிய வருவாய் இன்றி இந்த கேசட்டுகளை அதிகம் வைக்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் அதிகரிப்பு ஏன்?
தற்போது இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில், காசோலை புத்தகம் பெறவும், வங்கியில் அளித்துள்ள மொபைல் எண் மாற்றம், காசோலை நிறுத்தம் என இலவசமாக வழங்கப்பட்ட சேவைகளுக்கு ரூ50 முதல் ரூ350 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், படிக்காத மற்றும் ஏழை வாடிக்கையாளர்கள், குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதுபற்றி, வங்கி அதிகாரி கூறுகையில், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், வங்கியில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் பணத்தை பொறுத்து அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

வட்டியும் அதிகபட்சம் ஆண்டிற்கு 2 சதவீதம் தான். ஆனால், நமது நாட்டில் வங்கிகள் வழங்கியுள்ள கடன்கள் மூலம் வரும் வட்டியை கொண்டு சம்பளம் வழங்குவது, முதலீடு மற்றும் வைப்பு தொகைகளுக்கு வட்டி வழங்கி வருகின்றன. தற்போது, வங்கி கடனின் வட்டி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால், சில வங்கிகள் தங்களின் சேவைக்கு கட்டணம் விதிக்கின்றன என்றார்.

Tags : ATM , ATM, money
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...