×

குறுகிய காலத்தில் அதிக மருத்துவ மாணவர்கள் படிக்கும் இடங்களை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி பேச்சு

கிருஷ்ணகிரி: குறுகிய காலத்தில் அதிக மருத்துவ மாணவர்கள் படிக்கும் இடங்களை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ரூ.348 கோடி மதிப்பில் புதிதாக அமையவிருக்கும் மருத்துவ கல்லூரிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்ததுடன், நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி; அடுத்த ஆண்டு ஜனவரியில் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்படும். அதிமுக ஆட்சியில் புதிதாக 2,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் அதிக மருத்துவ மாணவர்கள் படிக்கும் இடங்களை உருவாக்கியுள்ளது அதிமுக அரசு. சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான கேன்சர் சிகிச்சை கருவியை மருத்துவ கல்லூரிக்கு வழங்க இருக்கிறோம். தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் உடைய அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் 2 கைகள் இல்லாத ஒருவருக்கு கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மக்களில் 90% பேர் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் விரைவில் அனைவரும் தனியார் மருத்துவமனைகளை விடுத்து அரசு மருத்துவமனையை நாடி வரும் நிலை உருவாகும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் சுகாதார சேவை சிறந்து விளங்குகிறது. கிராம மக்களுக்கு 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்; கிராம மக்களுக்கு கண் நோய் தவிர்க்கும் மருத்துவ சிகிச்சைகள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.


Tags : government ,CM Palanisamy ,AIADMK , More medical students, AIADMK government, CM Palanisamy
× RELATED வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை