×

நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு!

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு அளித்துள்ளது. மருத்துவ மாணவியான நிர்பயா கொலை வழக்கில் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மறு சீராய்வு செய்ய கோரி, பவன்குமார் சார்பில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடிரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பவன்குமார் சார்பில் கருணை மனுவை அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே முகேஷ்சிங், வினய் ஷர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், பவன்குமாரின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர், நிராகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் பவன்குமாரின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதையடுத்து, குற்றவாளிகளை தூக்கில புதிய தேதியை நிர்ணயிக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கான அனைத்து சட்ட தீர்வுகளையும் பயன்படுத்திவிட்டதாகவும், இனி எந்த வாய்ப்பும் மிச்சமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி டி.ராணா, இதுகுறித்து பதிலளிக்க குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், இம்மனு மீதான விரிவான விசாரணை நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மூன்று முறை, குற்றவாளிகளை தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டு அவை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய தேதியை அறிவிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : govt ,Delhi ,court ,convicts , Nirbhaya case, guilty, hanging, Delhi Govt
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...