×

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வின் போது, 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிப்பு

கீழடி : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் எச்சங்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்கள் பயன்படுத்திய பலவகைப் பொருள்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை ரூ.12 கோடி மதிப்பீட்டில் காட்சிப்படுத்தி வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.இதற்காக, தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

இதனிடையே , தமிழக அரசு சாா்பில் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைத்தாா். இதில், கீழடி கிராமத்துக்கு அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூா் ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படவுள்ளது.இந்நிலையில் கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 பழங்கால செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அது தற்போது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை 3 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : floor , Downstairs ,, brick, walls, invention
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!