×

தொழில்நுட்பப் காரணங்களால் ஜிஐசாட்-1 புவிகண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைப்பு : இஸ்ரோ ட்வீட்

சென்னை: புவிகண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பப் காரணங்களால் ஜிஐசாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.

*விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை தயார் செய்து இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.  இந்தநிலையில், ஜிஐசாட்-1 என்ற (ஜியோ இமேஜிங்) செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான சோதனை பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது.  

*இந்தநிலையில், ஜி.எஸ்.எல்.வி-எப் 10 ராக்கெட் மூலம் புவிகண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 2 ஆயிரத்து 268 கிலோ ஆகும்.

*மேலும், ஜிஐசாட்-1 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, வானிலை தரவுகளை ஆராய்வதற்காக இந்த செயற்கைக்கோள் பிரதானமாக பயன்படுத்தப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்படும் 14வது ராக்கெட் இது ஆகும். மேலும், 2020ம் ஆண்டின் விண்ணில் ஏவும் முதல் திட்டமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

*இந்நிலையில் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மார்ச் 05, 2020 அன்று திட்டமிடப்பட்ட ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட், தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. திருத்தப்பட்ட வெளியீட்டு தேதி உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Launch ,ISRO , Geodetics, GISAT-1, GSLV-F10, Rocket, ISRO, Satellite
× RELATED கேரளாவில் லாட்டரி குலுக்கல் துவக்கம்