×

நிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது என்பதை விஞ்ஞானிகள் துல்லியமாக ஆய்வு செய்வது எப்படி.?

நாம் வாழும் இந்த பூமி பல தட்டுகளால் உருவானது. இந்த தட்டுக்களை tectonic plates என்று கூறுவார்கள். பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே நிலநடுக்கம். பூமியில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பூகம்பம் நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை உபகரணங்கள் இல்லாமல் உணர முடியாத அளவுக்கு பலவீனமான அதிர்வாகும். பூமி 7 tectonic plates-களால் உருவாகியுள்ளது. இந்த ஏழில் பசிபிக் tectonic plate தான் மிகப் பெரியது. இது தொடர்ந்து சீராக நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் பூமிக்கு அடியில் இந்த plate நகருவதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவை மிக மெதுவாக நகர்கிறது.

பலமான அதிர்வு..

இந்த tectonic plate-கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதாலோ அல்லது உரசி கொள்வதாலோ நிலநடுக்கம் ஏற்படுகிறது. tectonic plate-களின் மேற்பரப்பு ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதை fault plane என்கின்றனர். tectonic plate-கள் மெதுவாக உரசி கொண்டால் ஏற்படும் நில அதிர்வை நம்மால் உணர முடியாது. ஆனால் பலமாக உரசி கொண்டால் சுமார் 1,000 மைல் வரை நில அதிர்வை உணர முடியும்.

மலைகளை உண்டாக்கும்..

பூமியில் நிலநடுக்கம் உண்டாகும் இடத்தை Hypo center என்கிறோம். தரை பகுதியில் நில அதிர்வு ஏற்படும் இடத்தை Epicenter என்கிறோம். இரண்டு நிலதட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மிக வலிமையாக மோதுவதால் உருவாகும் நிலநடுக்கம் convergent boundary எனப்படுகிறது. இந்த நிகழ்வின் போது தான், விண்ணை முட்டும் அளவிலான பிரமாண்ட மலைகள் தோன்றுகின்றன. Divergent boundary எனப்படுவது நிலத்தட்டுகள் ஒன்றை விட்டு மற்றொன்று நீங்கி செல்வதால் நிகழ்கிறது. நிலத்தட்டுகள் இவ்வாறு விலகுவதால் கடல் பகுதிகள் தோன்றுகின்றன. இரு நிலத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் நிகழ்வது transform fault.

துல்லிய அளவு எப்படி.?

சர்வதேச அளவில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனை கண்டறிய seismograph என்ற கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல நிலநடுக்கம் எங்கே நிகழ்ந்துள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய Triangulation என்ற முறையை பயன்படுத்துகின்றனர். இதனை செயல்படுத்த 3 seismograph கணக்கிடும் நிலையங்கள் தேவை. 3 seismograph நிலையங்களில் இருந்து P மற்றும் S Waves பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்ட வேண்டும். இதில் P Wave எனப்படும் Primary Wave என்பது நிலநடுக்கம் நிகழ்ந்த உடனே நேராக பயணிக்கும் அதிர்வாகும். secondary wave எனப்படும் S Wave அலை போல பயணிக்கும். ஆனால் இது நிலத்தில் பெரிய அளவில் பயணிக்காது. surface wave என்ற அலை நிலத்தின் ஒவ்வொரு பரப்பாக பயணிக்கும். இது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடிய அலைகள் ஆகும்.

மேற்கண்ட அலைகள் பற்றிய தகவல்களை மூன்று seismograph நிலையங்களில் இருந்து பெற்று ஆராய்வதன் மூலம், நிலநடுக்கம் எங்கே தோன்றியது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். நிலநடுக்கத்தின் போது வெளியாகும் சக்தி ரிக்டர் என்ற அளவு கோலில் அளவிடப்படுகிறது. ரிக்டர் seismograph கருவியால் அளவிடப்படுகிறது. இதில் ரிக்டர் அளவில் 1 எனப்படும் அளவு 54 கிலோ கிராம் அளவுள்ள வெடிமருந்து வெடிக்கும் போது உண்டாகும் ஆற்றலுக்கு ஈடானது. அதுவே 5 ரிக்டர் என்பது 18 லட்சம் கிலோ கிராம் அளவுள்ள வெடிமருந்தை வெடிக்க செய்வதால் உண்டாகும் ஆற்றலுக்கு ஈடாகும்.

Tags : scientists ,earthquake , The earth we live in is made up of many plates. These plates are called tectonic plates.
× RELATED இந்திய எல்லையில் நிலநடுக்கம்