×

நிலவின் மறுபக்கத்தை கண்டறிய சீனா ஆய்வு

நிலவின் மறுபக்கம் யார் அறிவார் என்று கூறுகிறது ஒரு தமிழ் சினிமா பாடல்...நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆராய சீனாவின் சாங்கே 4 விண்வெளித் திட்டம் முயல்கிறது. சாங்கே 4 செயற்கைக் கோள் நிலவில் கடந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி வான் கார்மன் கிரேட்டர் மூலம் நிலவில் இறங்கியது. இதன் நோக்கம் தென் துருவப் பகுதியான அய்ட்கின் பேசினை ஆய்வு செய்வதுதான்.

இது தான் நிலவின் அதிகபட்ச தூரமான பகுதியாகும். இப்பகுதியில் பாறைகளும் 39 அடி மண்ணும் இருப்பதை சீனாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது. அப்போலோ விண்வெளி வீரர்கள் நிலவின் முன்பகுதியில் கண்டுபிடித்த அதே அம்சங்கள் தான் நிலவின் பின்பகுதியிலும் காணக் கிடைக்கின்றன.


Tags : China ,moon , Who knows the other side of the moon is a Tamil cinema song
× RELATED சொல்லிட்டாங்க…