×

காவிரி -கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து ஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை; தெலங்கானா முதல்வருடனும் விரைவில் சந்திப்பு : முதல்வர் பழனிசாமி உறுதி

சென்னை : காவிரி -கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து ஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெலங்கானா முதல்வருடனும் விரைவில் சந்திப்பு மேற்கொள்ள உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.565 கோடி செலவில்  மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை மின் மோட்டார் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விடும் மேட்டூர் - சரபங்கா உபரிநீர் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, மேட்டூர் - சரபங்கா உபரிநீர் திட்டம் 11 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். திட்டத்தை அறிவித்துவிட்டு மக்களை ஏமாற்றும் அரசு அதிமுக அரசு இல்லை எனவும் முதல்வர் குறிப்பிட்டார். மேலும்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம் என்றும் தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார். தான் முதல்வராக பதவியேற்ற காலத்தில் இருந்து அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலங்களில்  நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து முதல்வர் பழனிசாமி விழாவில் பேசுகையில்,ஆட்சியும் அதிகாரிகளும் 2 சக்கரங்கள்.இரு சக்கரங்களும் சரியாக இருப்பதால் தான் இலக்கை நோக்கி செல்கிறோம்.காவிரி -கோதாவரி இணைப்பு திட்டம் மூலம் 200 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும்.திட்டத்தை செயல்படுத்த ரூ.64,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அமைச்சர்கள் சென்றுள்ளனர்.அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஆந்திரா சென்றுள்ளனர்.காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து ஆந்திர முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். மேலும் திட்டம் குறித்து தெலங்கானா முதல்வருடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.தெலங்கானா முதல்வரை சந்திக்க தேதி கேட்கப்பட்டுள்ளது,என்றார்.


Tags : ministers ,talks ,Chief Minister ,Tamil Nadu ,Godavari ,Cauvery ,Telangana ,CM , Cauvery - Communication, Plan, Ministers, Negotiations, Telangana, CM, Palanisamy
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...