×

இரட்டை பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்து இன்றுமுதல் மாற்றம்

மதுரை:மதுரை கோட்ட ரயில்கள் போக்குவரத்தில் மார்ச் 15ம் தேதி வரை, பல்வேறு மாற்றங்களை செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி அறிக்கை:
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் மற்றும் கடம்பூர் - வாஞ்சி மணியாச்சி - தட்டப்பாறை - நாரைக்கிணறு - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடப்பதாலும், இக்கோட்டத்தில் இயங்கும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 * மதுரை - பழநி பயணிகள் ரயில் (வண்டி எண்: 56624) மதுரை ரயில் நிலையத்திலிருந்து  காலை 7.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9.45 மணிக்கு பழநி சென்று சேரும். மார்ச் 4 (இன்று) முதல் வரும் 15ம் தேதி வரை தற்காலிகமாக இந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மதுரை - ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56721 / 56722) இன்று முதல் வரும் 15ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது (ஞாயிறு தவிர). திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 56829/56830) இன்று முதல் வரும் 15ம் தேதி வரை மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியாக (ஞாயிறு தவிர) ரத்து செய்யப்படுகிறது.

* திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் (வண்டி எண் : 56768) மார்ச் 11ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி இடையேயும், தூத்துக்குடி - திருச்செந்தூர் - தூத்துக்குடி பயணிகள் ரயில் (வண்டி எண் : 56767/56768) மார்ச் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை தூத்துக்குடி மற்றும் நெல்லை இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண் : 56769/56770) மார்ச் 5, 6, 7, 10, 12, 13, 14 ஆகிய தேதிகளில் கோவில்பட்டி மற்றும் நெல்லைக்கு இடையேயும், பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56769/56770) மார்ச் 4, 8, 11, 15 ஆகிய தேதிகளில் மதுரை மற்றும் நெல்லைக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56770) மார்ச் 4, 8, 11, 15 ஆகிய தேதிகளில், மதுரை  நிலையத்திலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

* செங்கோட்டை  - மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56734/56735) இன்று முதல் வரும் 15ம் தேதி வரை விருதுநகர் மற்றும் மதுரை இடையேயும் (வியாழன் தவிர) பகுதியாக ரத்தாகிறது.

* நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் (வண்டி எண் : 56319/56320) இன்று முதல் வரும் 15ம் தேதி வரை திருப்பரங்குன்றம் மற்றும் திண்டுக்கல் இடையேயும் (வியாழன் தவிர) பகுதியாக ரத்தாகிறது.

* திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் (வண்டி எண் : 22627/22628) மார்ச் 11 முதல் 15ம் தேதி வரை கோவில்பட்டி மற்றும் திருவனந்தபுரம் இடையேயும், நெல்ைல - மயிலாடுதுறை - நெல்லை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56822/56821) மார்ச் 6, 9, 11, 13 ஆகிய நாட்களில் திண்டுக்கல் மற்றும் திருச்சி இடையேயும் பகுதியாக ரத்தாகிறது.

* தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண் 16191 / 16192) மார்ச் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை, திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையேயும்  பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண்: 76840) காரைக்குடி  ரயில் நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, இன்று முதல் வரும் 15ம் தேதி வரை காலை 11 மணிக்கு புறப்படும் (ஞாயிறு தவிர).

* மாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை - தாதர் வாரம் மும்முறை இயக்கப்படும் விரைவு ரயில் (வண்டி எண்: 11022) மார்ச் 12  மற்றும் 13 தேதிகளில் நெல்லை ரயில் நிலையத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.

* திருநெல்வேலி - ஈரோடு / மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56826 ) இன்று முதல் வரும் 15ம் தேதி வரை சேலம் கோட்டத்திற்கு 115 நிமிடங்கள் காலதாமதமாக சென்றடையும் (ஞாயிறு தவிர).

* நெல்லை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56822) மார்ச்  5, 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் 135  நிமிடங்கள் தாமதமாக திருச்சி கோட்டம் சென்றடையும்.

* திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண் : 56770) இன்று முதல்   வரும் 14ம் தேதி வரை வரை ஒரு மணிநேரம் காலதாமதமாக பாலக்காடு கோட்டம் சென்றடையும் (புதன் மற்றும் ஞாயிறு தவிர).இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rail Traffic,Transfer , Two-Way Works
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...