×

சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்பால் சங்கு ரூ.50க்கு விற்பனை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் கழுதைப்பால் ஒரு சங்கு ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் கழுதைப்பால் விற்பவர்கள் முகாமிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், ஆண்டுதோறும் சத்தியமங்கலம் பகுதிக்கு வந்து கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர். கழுதைப்பால் மருத்துவ குணம் நிறைந்தது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என கூறப்படுகிறது.

இதனால், கழுதைப்பாலை பொதுமக்கள் விரும்பி வாங்கி குடிக்கின்றனர். தற்போது, சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை செய்பவர்கள் காலை 6 மணி முதல் வீதி வீதியாக சென்று கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். கழுதைப்பால் கேட்பவர்களுக்கு அவர்களின் கண்முன்பே கறந்து தரப்படுகிறது. ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.50க்கும், 50 மி.லி. கழுதைப்பால் ரூ.200க்கும் விற்பனை செய்யப்படுவதாக கழுதைப்பால் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Tags : area ,Rs ,Sathiyamangalam , Sathiyamangalam area,sale,Rs
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி