×

பொய்கை நல்லூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்: உடைந்த குழாய்களை சீரமைக்க கோரிக்கை

நாகை: மின்சார கம்பிகளை பூமிக்குள் புதைக்கும் போது குடிநீர் குழாய்களை உடைப்பதால் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டம் இயற்கை இடர்பாடுகளை அடிக்கடி சந்திப்பதால் மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்து விடுகிறது. அதே போல் மின் கம்பங்களும் முறிந்து விழுகிறது. இதனால் மின்தடை ஏற்படுகிறது. மேலும் உப்புகாற்று வீசுவதால் மின்கம்பிகளில் உப்பு படித்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மின்பற்றாக்குறையை போக்க மின்சார ஒயர்களை பூமிக்கும் புதைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக வேளாங்கண்ணி பகுதியில் இந்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணியாளர்களை வைத்து குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணியாளர்கள் இஷ்டம் போல் குழிகளை தோண்டுவதால் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் எந்த நேரமும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லுர் மாரியம்மன் கோயில் தெருவில் இதே போல் மின்சார கம்பிகளை பூமிக்கு அடியில் பதிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது வேளாங்கண்ணிக்கு செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் வேளாங்கண்ணி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Tags : Pooja Nallur ,Polly Nallur , Risk ,shortage , drinking water, Polly Nallur, demand ,repair broken pipes
× RELATED பொய்கை நல்லூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்