×

மறையூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பிற்காக அமைக்கப்பட்ட சிசிடிவி திருட்டு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை

மூணாறு: மூணாறு அருகே, மறையூர் வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் திருடுபோனது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம், மூணாறு அருகே உடுமலை செல்லும் சாலையில் மறையூர் வனப்பகுதி உள்ளது. இங்கு சந்தன மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த வனச்சரகத்திற்கு உட்பட்ட நாகமலை இடிவரை சோலைக் காடுகளில் புலிகளை கணக்கெடுப்பதற்காக கடந்த ஜனவரி 24ல் ரூ.50 ஆயிரத்தில் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வந்தது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படங்களை ஆராய, கடந்த பிப்.27ல் அதிகாரிகள் நாகமலை வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் திருடு போனது தெரிய வந்தது.

மேலும் மறையூர் டவுனிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வனப்பகுதியில் திருடு போன சம்பவம்அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறையினர் மறையூர் போலீசாருக்கு தகவல் அளித்ததில் பெயரின், சம்பவம் இடத்திற்கு மறையூர் காவல்துறை துணை ஆய்வாளர் கே.கே அணில் மற்றும் கைரேகை நிபுணர் வந்து சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். இடுக்கியில் இருந்து மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனை ந்டத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘ஆள் நடமாட்டம் இல்லாத நாகமலை இடிவரை வனப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும், சந்தன மரங்களை வெட்டி கடத்தவும் சில கும்பல்கள் சிசிடிவியை திருடி இருக்கலாம்’ என்றனர்.

Tags : CCTV ,forest officials ,Investigation ,LTTE ,Maraiyur Forest ,Forest ,Tiger , Maraiyur, Forest, Tigers, CCTV, Theft, Forest Officers
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...