×

நாட்டின் பொருளாதார சரிவு எதிரொலி :ஐபிஎல் தொடரில் பரிசுத் தொகையை பாதியாக குறைக்க பிசிசிஐ முடிவு

மும்பை : நாட்டின் பொருளாதார சரிவு எதிரொலியாக ஐபிஎல் தொடரில் பரிசுத் தொகையை பாதியாக குறைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. நாடு எதிர்கொணடுள்ள பொருளாதார சரிவுக்கு உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக வர்ணிக்கப்படும் இந்திய கிரிக்கெட் வாரியமும் தப்பவில்லை. இதனால் விளம்பர வருவாய் குறையக்கூடும் என்ற கிரிக்கெட் வாரியம், பெரிய அளவில் ஆடம்பரமாக நடத்தப்படும் ஐபிஎல் தொடரை இம்முறை சிக்கனமாக நடத்த முடிவு செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக பாலிவுட் நட்சத்திரங்களை கொண்டு பிரமாண்டமாக நடத்தப்படும் ஐபிஎல் தொடக்கவிழாவை இவ்வாண்டு ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் லீக் சுற்றை தாண்டி பிலே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை பாதியாக குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தாண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும் 2ம் இடம் பிடிக்கும் ஆணுக்கு ரூ.6.25 கோடியும் 3வது மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.4.375 கோடியும் வழங்கப்படும். சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாக ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளுடனும் ஆலோசித்து பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : country ,IPL ,downturn ,BCCI , Indian Cricket Board, Prize money, BCCI, IPL
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!