×

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 8 எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி சென்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு: மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு

போபால்: ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் 8 எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி சென்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டடியுள்ளது, மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. 231 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. அம்மாநில முதல்வராக கமல்நாத் பதவி வகித்து வருகிறார். ஒரு ஆண்டுக்கு மேலாக கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், மத்திய பிரதேச அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் என 8 எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்திச் சென்றதாக அம்மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜிது பட்வாரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த ஜிது பட்வாரி மேலும் கூறுகையில், ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டத்துடன் எங்களுக்கு ஆதரவான 8 எம்.எல்.ஏக்களை முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடத்திச்சென்றுள்ளனர். இவை அனைத்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்களை விலை வாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர்களான சிவராஜ் சிங் சவுகான், நரோட்டம் மிஸ்ரா, பூபேந்திர சிங், ராம்பால் சிங் உள்ளிட்டோர், 8 எம்எல்ஏக்களை ஹரியானாவில் உள்ள ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர். பாஜகவால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டோம் என எம்எல்ஏக்கள் எங்களிடம் கூறினர். அவர்களை பாஜகவின் பிடியிலிருந்து மீட்க முயற்சித்து வருகிறோம், என கூறியுள்ளார். இந்நிலையில் இவ்விகாரம் குறித்து பேசிய முதல்வர் கமல்நாத், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. பாஜக நினைப்பது எதுவும் நடக்காது.

எம்எல்ஏக்கள் மீண்டும் வந்துவிடுவர். பிஎஸ்பி பெண் எம்எல்ஏ ராமாபாயை பாஜகவினர் தாக்கியதாக தெரிவித்துள்ளார், என கூறியுள்ளார். பாஜக அழைத்து சென்ற 8 பேரில் 4 பேர் காங்கிரஸ், ஒருவர் சுயேச்சை, மற்றவர்கள் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தோர் என கூறப்படுகிறது. இதற்கிடையில், மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் அவரது மகன் ஜெய்வர்தன் சிங் ஆகியோர், எம்.எல்.ஏக்களை சந்திக்க அரியானா ஓட்டல் சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Congress ,BJP ,coup ,Madhya Pradesh , Madhya Pradesh, Congress, BJP, MLAs, kidnapping
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...