×

துறையூர் அருகே தடுப்பு சுவரின்றி உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர கிணறு: வாகன ஓட்டிகள் அச்சம்

துறையூர்: துறையூர் அருகே தடுப்பு சுவரின்றி உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் சாலையோர தரைக்கிணறால் வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சியில் விபத்தை உண்டாக்கும் தரைக்கிணறுகள் உள்ளது. சிங்களாந்தபுரத்திலிருந்து ஹாவுசிங் போர்டு வழியாக செல்லும் சாலையில் 2 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகள் சாலை ஓரமாக 80 அடி ஆழத்திற்கு மேல் இருப்பதால் எந்த நேரத்திலும் பெரிய விபத்துகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக மினி பஸ்கள் மற்றும் பள்ளி வேன்கள், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதி மழைக்காலத்தில் கரைந்து சாலையின் அருகே பெரிய பள்ளமாக உள்ளது.

மேலும் இந்த தரைக்கிணறு சாலையின் வளைவு பகுதியில் உள்ளதால் வாகனங்கள் விழுந்து உயிர் பலி ஏற்படும் வகையில் மிக ஆபத்தை தரும் நிலையில் உள்ளது. இந்த கிணற்றுக்கு சொந்தக்காரர் பாதுகாப்பில்லாத குச்சிகளால் தடுப்பு வேலி அமைத்து உள்ளார். இது போல பலியாயினர். அதன் பிறகுதான் சாலையோர கிணறுகளில் நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புச்சுவர்களை கட்டினர். ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த பணிகளை செய்யமால் விட்டுவிட்டனர். சம்பந்தபட்ட ஊராட்சிகளில் உள்ள எத்தனை தரைக்கிணறுகள் இருக்கின்றன என்பதை கணக்கெடுத்து தடுப்பு சுவர் காட்டவேண்டும். எனவே பெரும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க இந்த சாலையோரத்தில் இருக்கும் கிணறுகளுக்கு தடுப்புச்சுவர் அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகனஓட்டிகள் மற்றும் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு எரகுடி-திருமனூர் சாலையில் ஆட்களை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ சாலையோர கிணற்றில் கவிழ்ந்து 8 பேரை பலியாயினர்.

Tags : duraiyur ,motorists ,barricade ,Thuraiyur , Roadside , waiting ,barricade, Thuraiyur,Motorists fear
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...