×

மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: மானசரோவர், முக்திநாத்  யாத்திரை சென்றவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.  இந்து சமய அறநிலையத்துறை ெவளியிட்ட அறிவிப்பு:  சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பிய, தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டத்தின்படி, நிபந்தனைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு  2019-2020ம் நிதியாண்டில் (1.4.2019 முதல் 31.3.2020 முடிய) புனித யாத்திரை முடித்த யாத்ரீகர்களிடமிருந்து வருகிற ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறை இணையதளமான www.tnhrce.gov.inல் பதிவேற்றப்பட்டுள்ள உறுதிமொழியுடன் கூடிய விண்ணப்ப படிவங்களை மட்டுமே பதிவிறக்கம் செய்து  பயன்படுத்த வேண்டும்.

இதர படிவங்களில் விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் 30.4.2020ம் தேதிக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் “ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600034”” என்ற முகவரிக்கு 30.4.2020ம்  தேதிக்குள்  கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.  தகுதி வாய்ந்த மானசரோவர் யாத்ரீகர்கள் 500 நபர்களுக்கு மட்டும் தலா ரூ.40,000 வீதமும் மற்றும் தகுதி வாய்ந்த முக்திநாத் யாத்ரீகர்கள் 500 நபர்களுக்கு மட்டும் தலா ரூ.10,000 வீதமும் மானியம் வழங்கப்படும்.

Tags : pilgrims ,Hindu Religious Trust Department ,Mansarovar ,Muktinath , Manasarovar, Muktinath Pilgrimage, Hindu Religious Center
× RELATED உற்சாகத்தில் முருக பக்தர்கள்! அறுபடை...