×

தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை: மாவட்ட வாரியாக விவரம் சேகரிப்பு

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் பட்டியலை வழங்கும்படி பள்ளிக்கல்வித்துறை, முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கவுன்சலிங் முறையில் இடமாற்றம் வழங்கப்பட்டது.
கடந்த 2019ல் நடத்தப்பட்ட கவுன்சிலிங்குக்கு பின்னர் பள்ளிகளில் ஏற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வு மற்றும் புதிய நியமனங்கள் வழியாக  நிரப்புவதற்கான நடவடிக்கை தற்போது தொடங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதற்கான பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி நிலவரப்படி தலைமை ஆசிரியர் பதவி காலியாக உள்ள பள்ளிகள், மாவட்டங்கள், அந்த பள்ளியில் உள்ள மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை ஆகிய விவரங்களையும், இந்த பட்டியலில் இணைத்து w1tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே காலி பணியிட பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தால் தற்போதைய நிலவரப்படி, அதில் உள்ள விவரங்களை சரிபார்க்கவும், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகள் முடிந்ததும், காலியிடங்களில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமிப்பதா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதா என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Headmaster ,Government Secondary Schools ,Teacher Staff ,Tamil Nadu ,District ,Teacher , Measures , fill the role , Headmaster , Teacher in Government Secondary Schools , Tamil Nadu
× RELATED ஓமலூர் அருகே தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு..!!