மக்களை திசை திருப்பும் திட்டம்: மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள கணக்குகளை விட்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பின்னர் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், சர்வதேச மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்க அனுமதிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `அனைத்து சமூக வலைதள கணக்குகளில் இருந்தும் விலகும் திட்டம் இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தது, தலைப்பு செய்தியானது.

ஆனால், பாஜ, மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை,’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>