×

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா மோதல்

சிட்னி: மகளிர் டி20 உலக கோப்பை போட்டி அரையிறுதிப் போட்டிகளில்  இந்தியா- இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்று விட்டன. ஆனால் பி பிரிவில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்ற  இங்கிலாந்து 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளும், தென் ஆப்ரிக்கா 3 போட்டியில் விளையாடி 3லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளும் பெற்று சமநிலையில் இருந்தன.

அதனால் தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி லீக் போட்டிக்கு பிறகே முதல் இடம் யாருக்கு என்று முடிவாகும் என்ற நிலை. ஆனால் மழை காரணமாக நேற்று நடைபெற இருந்த இந்தப் போட்டி கைவிடப்பட்டது. அதனால் 2 அணிகளுக்கும் தலா ஒருப்புள்ளி வழங்கப்பட்டது. எனவே தென் ஆப்ரிக்கா அணி பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. அதனால் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும்.

Tags : India ,Australia ,England ,South Africa ,clash ,semi-final ,women ,World Twenty20 , Women, T20 World Cup, Semifinals, India-England, South Africa-Australia, clash
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!