×

ரஞ்சி கோப்பை பைனலில் பெங்கால்

கொல்கத்தா:  நடப்பு ரஞ்சி கோப்பைத் தொடரில் பெங்கால்-கர்நாடகா அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் பிப்.29ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் பெங்கால் அணி 312ரன் சேர்த்து ஆட்டமிழந்தது.  கர்நாடகா முதல் இன்னிங்சில் 122 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து 190ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய பெங்கால் 161ரன்னில் ஆட்டமிழந்தது. இந்நிலையில் 352ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3வது நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் 38ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து 4வது நாளான நேற்று கர்நாடகா 2வது இன்னிங்சை தொடர்நது விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தேவதூத் படிக்கல் 62. மணீஷ் பாண்டே 14ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களும் பெங்கால் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் குறைந்த ரன்னில் வெளியேற, கர்நாடகா 54.4ஓவரில் 161ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் பெங்கால் 174ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

* 30 ஆண்டு கனவு
பெங்கால்அணி கடைசியாக 2006-07ம் ஆண்டில் ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாடியது. இப்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு 14வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இதுவரை இறுதிப் போட்டியில் 13முறை விளையாடி 1938-39, 1989-90 என 2 முறை மட்டுமே ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது. இப்போது கோப்பையை வென்றால் 30 ஆண்டு கால கனவு நிறைவேறும்.

* மோசமான ஆட்டம்
கர்நாடகா அணிக்காக விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே இந்த போட்டியில் மோசமாக விளையாடினர். முதல், 2வது இன்னிங்சில் முறையே ராகுல் 26, 0 ரன்னும், மணீஷ் தலா 12 ரன் மட்டுமே எடுத்தனர். நடப்பு ரஞ்சித் தொடரில் ஒருத் தோல்வியை கூட சந்திக்காத கர்நாடகா, இன்னும் ஒன்றரை நாள் ஆட்டம் எஞ்சியிருந்த நிலையில் மோசமாக தோற்று வெளியேறியது.

Tags : Bengal ,final ,Ranji ,Cup final , Ranji Cup, Final, Bengal
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை