×

தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஆப்கன் அதிபருக்கு டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை வாபஸ் பெற, அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதை அமைதியான முறையில் முடிப்பதற்காக, கத்தாரில் தலிபான் தீவிரவாத அமைப்புடன் அமெரிக்கா பேச்சு நடத்தி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், டிரம்ப்பும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடினர். அப்போது அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உதவியதற்காக அஷ்ரப் கனிக்கு, அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Afghan ,president ,Trump ,Taliban , Taliban, peace deal, Afghan president, Trump, praise
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்