×

இன்று முதல் 10ம் தேதி வரை திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி வரையே இயக்கம்: நெல்லை, திருவனந்தபுரம் செல்லாது

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: மதுரை கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெற இருப்பதால் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்: 22627 திருச்சி -திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி-திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே மார்ச் 3ம் தேதி (இன்று) முதல் 10ம் தேதி வரை (9ம் தேதி தவிர) ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் இந்நாட்களில் திருச்சி - கோவில்பட்டி இடையே மட்டும் இயக்கப்படும். ரயில் எண்: 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் -திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரல் - கோவில்பட்டி இடையே மார்ச் 3ம் தேதி (இன்று) முதல் 10ம் தேதி வரை (9ம் தேதி தவிர) ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் கோவில்பட்டி-திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும்.

ரயில் எண் 16191 தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து மார்ச் 2, 3, 4, 5, 6, 7 மற்றும் 9ம் தேதிகளில் புறப்படுவது திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இந்நாட்களில் புறப்படுவது திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். இதனை போன்று ரயில் எண் 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து மார்ச் 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 10ம் தேதிகளில் புறப்படுவது நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திண்டுக்கலில் இருந்து புறப்படுவது இந்த நாட்களில் திண்டுக்கல்-தாம்பரம் இடையே மட்டும் இயக்கப்படும். பாலக்காடு கோட்டத்தில் மங்களூர் ஜங்ஷன்-பனம்பூர் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெற இருப்பதால் காந்திதாம்-திருநெல்வேலி ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 3ம் தேதி (இன்று) 1 மணி நேரம் கொங்கண் ரயில்வே பகுதியில் நிறுத்திவிடப்படும்.

Tags : Trichy Inter City Express Kovilpatti ,Trivandrum ,Paddy , Trichy Intercity Express, Kovilpatti, Trivandrum
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...